2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

கொழும்பில் இன்று திடீர் நீர் வெட்டு!

உள்ளூர்April 4, 2026 · 4 months முன்0

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு இன்று நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கலட்டுவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் விநியோகிக்கப்படும் பல பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அதற்கமைய பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிபிட்டிய ஆகிய நான்கு வலயங்களில் 18 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதால், பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தமக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.