2026 October 10, Saturday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கனமழையையும் கடந்து பரீட்சைக்கு வந்த மாணவர்கள்

உள்ளூர்August 9, 2026 · 2 months முன்3
கனமழையையும் கடந்து பரீட்சைக்கு வந்த மாணவர்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. 

நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை முதலே கொட்டித் தீர்த்த கனமழையையும் பொருட்படுத்தாது, மாணவர்கள் தமது பெற்றோருடன் பரீட்சை நிலையங்களுக்கு ஆர்வத்துடன் வருகை தந்தனர். 

மழையினால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் தவிர்க்கும் பொருட்டு, பெற்றோர்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளைப் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். மேலும், மாணவர்களின் தடையற்ற போக்குவரத்திற்காக அரசாங்கத்தினால் விசேட ‘சிசு செரிய’ பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.