2026 October 12, Monday ⛅ கொழும்பு 23° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மிரிஹானையில் போலி நாணயத்தாள் அச்சகம் முற்றுகை!

உள்ளூர்August 9, 2026 · 2 months முன்7
மிரிஹானையில் போலி நாணயத்தாள் அச்சகம் முற்றுகை!

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபரொருவர் மேல் மாகாணத்தின் தெற்கு திசை குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேல் மாகாண தெற்கு திசை குற்றப் குற்றவியல் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய, மிரிஹானை, கோட்டே வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது போலியாக அச்சிடப்பட்டிருந்த 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் 07, 1,000 ரூபாய் நாணயத்தாள்கள் 06, 500 ரூபாய் நாணயத்தாள் 01, கணினியொன்று, ஸ்கேனர் இயந்திரம் மற்றும் அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிட்டகோட்டே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவராவார். அவர் இன்று (09) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.