2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 32° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சிறைக் கொடுமைகள் குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

உலகம்September 10, 2026 · 1 month முன்9
சிறைக் கொடுமைகள் குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இன்று (10)இலங்கை வரவுள்ளது. 

அந்த குழுவானது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இந்த மதிப்பீட்டு பணிகளை முன்னெடுக்கவுள்ளது. 

இந்த விஜயம் குறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைந்த 7வது மதிப்பாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டின் உறுப்புரை IV ஆலோசனைகள் ஆகியவற்றில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், இந்த விஜயத்தின் முடிவில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு தமது அறிவிப்பை வௌியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கொள்கை வகுப்பாளர்களின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகளைத் தொடரும் நிலையில், பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை இந்த விஜயத்தின்போது தூதுக்குழுவினரால் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது. 

அதேவேளை, நாட்டின் பேரண்ட பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் அந்த குழுவினர் ஆராய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாப்பஜோர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு முன்னதாக 2026 ஜூன் 24 முதல் 30 ஆம் திகதி வரை கொழும்பில் மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்தே, இந்த செப்டெம்பர் மாத விஜயம் இடம்பெறுகின்றது. 

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி ஆதரவு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.