2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வாகன விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழப்பு

உள்ளூர்December 26, 2025 · 8 months முன்2
வாகன விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழப்பு

நேற்று (25) மாலை வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்கம – மத்துகம பிரதான வீதியின் 5ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில், 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமி, தனது தாய் மற்றும் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மத்துகம நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, எதிர்திசையில் இருந்து வந்த கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த சிறுமி, அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோர் தர்கா நகர அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிறுமி அங்கு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், காயமடைந்த சிறுமியின் தந்தை மற்றும் தாய் மேலதிக சிகிச்சைக்காக தற்போது நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.