2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் விருது வழங்கல்

உள்ளூர்February 17, 2026 · 6 months முன்1
இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் விருது வழங்கல்

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் (Sri Lanka – Canada Business Council) ஒருங்கிணைப்பில், இவ்வாண்டு இரண்டாவது தடவையாக முன்னெடுக்கப்படவுள்ள தொழில் முனைவோருக்கான விருது வழங்கல் நிகழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற இக்கலந்துரையாடலில், விருது வழங்கல் நிகழ்வைச் சிறப்பான முறையில் நடத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இவ்விருது வழங்கல் நிகழ்வானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட புத்தளம் மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது, எந்தெந்தத் துறைகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன என்பது குறித்தும், விருதுகளுக்கான தகுதிநிலைகள் மற்றும் தெரிவு முறைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இவ்விருதுத் திட்டம் குறித்துத் தொழில் முனைவோரிடையே விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரடியாகச் சென்று, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளுக்கு இவ்விருதுத் திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல்களை வழங்குவதெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், விவசாயம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டச் செயலகங்கள் சார்பிலுமான பிரதிநிதிகள், முதலீட்டுச் சபையின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.