2026 October 19, Monday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஐக்கிய இராச்சியத்தின் பிரதிப் பிரதமர் இலங்கை வருகை

உள்ளூர்February 17, 2026 · 8 months முன்5
ஐக்கிய இராச்சியத்தின் பிரதிப் பிரதமர் இலங்கை வருகை

ஐக்கிய இராச்சியத்தின் பிரதிப் பிரதமர் திரு. டேவிட் லாம்மி (David Lammy) ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (பெப்ரவரி 17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் டோஹாவிலிருந்து வருகை தந்த கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) QR-664 விமானம் மூலம் காலை 09:11 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவருடன் பிரதிப் பிரதமர் அலுவலகத்தின் 7 சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று வருகை தந்துள்ளனர்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறையில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் அதிகாரிகள் குழுவினர் அவர்களை வரவேற்றனர்.

திரு. டேவிட் லாம்மி மற்றும் அவரது குழுவினர் அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

திரு. டேவிட் லாம்மி தலைமையிலான இந்தத் தூதுக்குழுவினர் தமது உத்தியோகபூர்வ பணிகளை முடித்துக்கொண்டு இன்று (பெப்ரவரி 17) மாலை நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்.