2026 September 5, Saturday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 31° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
இலங்கை–இங்கிலாந்து தொடருக்கு அணிகள் தயார்!5,083 பேர் இன்னும் காணாமல் போன நிலையில் தேடுதல் தீவிரம்!மன்னார் சிறுவர் பூங்காவில் “தானத்தில் சிறந்தது கல்வி” நிகழ்வு!சமையல் எரிவாயு விலை இன்று முதல் குறைகிறது!இன்று பல பகுதிகளில் 75 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் – விசாரணை வளையத்தில் நாமல்!பனிப்பாறை வெள்ளத்திற்குப் பின் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட இருவர்!15 மனுக்களின் விசாரணையை முடித்த உயர்நீதிமன்றம்!

5,083 பேர் இன்னும் காணாமல் போன நிலையில் தேடுதல் தீவிரம்!

உலகம்September 5, 2026 · 1 hour முன்4
5,083 பேர் இன்னும் காணாமல் போன நிலையில் தேடுதல் தீவிரம்!

நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட பாரிய திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒன்பது நாட்கள் கடந்துள்ள நிலையிலும், சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.திரிசூலி நீர்மின்சாரத் திட்ட

சுரங்கப்பாதையில் இருந்து வெள்ளிக்கிழமை இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையிலேயே மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அதே சுரங்கப்பாதையில் மற்றொருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 39 பேர் வரை அதே சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

திடீர் வெள்ளம் காரணமா, நேபாளத்தில் இதுவரை 1,287 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5,083 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத் பகுதியில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 531 பேரைக் காணவில்லை. ஒட்டுமொத்தமாக இந்தப் பேரிடரில் 1,311 பேர் உயிரிழந்துள்ளனர்.சேறும் பாறைகளும் நிரம்பியுள்ளதாலும், வெள்ள நீர் மட்டம் இன்னும் அதிகமாக இருப்பதாலும் சுரங்கப்பாதைகளுக்குள் நுழைவதில் மீட்புக் குழுவினருக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.