2026 September 5, Saturday ⛅ கொழும்பு 30° ☀️ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
மன்னார் சிறுவர் பூங்காவில் “தானத்தில் சிறந்தது கல்வி” நிகழ்வு!சமையல் எரிவாயு விலை இன்று முதல் குறைகிறது!இன்று பல பகுதிகளில் 75 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் – விசாரணை வளையத்தில் நாமல்!பனிப்பாறை வெள்ளத்திற்குப் பின் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட இருவர்!15 மனுக்களின் விசாரணையை முடித்த உயர்நீதிமன்றம்!ஊழல் எதிர்ப்புத் திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் முக்கிய தீர்மானம் எதிர்பார்ப்பு!பெண்ணிய இயக்கத்தின் முன்னோடி குளோரியா ஸ்டெய்னம் காலமானார்!

சமையல் எரிவாயு விலை இன்று முதல் குறைகிறது!

NEWS ALERTஉள்ளூர்September 5, 2026 · 43 minutes முன்4
சமையல் எரிவாயு விலை இன்று முதல் குறைகிறது!

நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக  லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பானது இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது. அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.