2026 August 15, Saturday ⛈️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

உள்ளூர்April 20, 2026 · 4 months முன்0

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (20) ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டுக்காக இன்று ஆரம்பமாகும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. 

அதேநேரம் முஸ்லிம் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதுடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. 

அதன்பின்னர்  முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த 10 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.