2026 September 8, Tuesday ⛅ கொழும்பு 30° ☀️ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 29° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
24 மாதங்களில் இரண்டாவது குற்றம்: பாத்திமா சனாவுக்கு அபராதம்!சட்டமன்ற நேரம் தனிமனித தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது – CPM கண்டனம்அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் நாளை அடையாள வேலைநிறுத்தம்!ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒக்டோபர் 02க்கு ஒத்திவைப்பு!ரூ.53.7 மில்லியன் போ#தைப்பொருளுடன் இரு தாய்லாந்து பிரஜைகள் கைது!ஜனாதிபதியின் கருத்தை எதிர்க்கட்சிகள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர்!22வது திருத்தத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உயர்நீதிமன்ற வியாக்கியானம்!இன்று பிற்பகல் வானிலையில் திடீர் மாற்றம்!

24 மாதங்களில் இரண்டாவது குற்றம்: பாத்திமா சனாவுக்கு அபராதம்!

விளையாட்டுSeptember 8, 2026 · 9 minutes முன்4
24 மாதங்களில் இரண்டாவது குற்றம்: பாத்திமா சனாவுக்கு அபராதம்!

ஆசியக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியின் போது மைதானத்தில் முறையற்ற செய்கை (gesturing) செய்ததற்காக பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவர் பாத்திமா சனா மீது (Fatima Sana) சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அவரின் போட்டி ஊதியத்தில் (match fee) 10 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக என்ற சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷபாலி வெர்மாவை (Shafali Verma) ஆட்டமிழக்கச் செய்த பின்னர், பாத்திமா சனா ,பார்வையாளர் அரங்கை நோக்கி முறையற்ற விதத்தில் சைகை காட்டியுள்ளார்.

இது ஐ.சி.சி நடத்தை விதிகளின் கீழ் குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமது தவறை ஒப்புக்கொண்ட சனாவுக்கு அபராதத்துடன், அவரது ஒழுக்கப் பதிவேட்டில் 1 தகுதிக்குறைப்புப் புள்ளியும் (demerit point) சேர்க்கப்பட்டுள்ளது.

இது, கடந்த 24 மாதங்களில் அவர் பெறும் இரண்டாவது குற்றமாகும்.