2026 September 8, Tuesday 🌧️ கொழும்பு 30° ☀️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
ஜனாதிபதியின் கருத்தை எதிர்க்கட்சிகள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர்!22வது திருத்தத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உயர்நீதிமன்ற வியாக்கியானம்!இன்று பிற்பகல் வானிலையில் திடீர் மாற்றம்!கொழும்பு–ஜகார்த்தா ஸ்ரீலங்கன் விமானங்கள் இரத்து!58 வயதான ‘வாசனா’ யானைக்கு இனி முக்கிய பெரஹெராக்கள் மட்டும்!கடும் வெப்பம்; யால வனம் தற்காலிகமாக மூடல்!அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!நாமலை சந்திக்க வெலிக்கடை சென்ற ஷிராந்தி!

இன்று பிற்பகல் வானிலையில் திடீர் மாற்றம்!

உள்ளூர்September 8, 2026 · 3 hours முன்5
இன்று பிற்பகல் வானிலையில் திடீர் மாற்றம்!

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.