2026 September 10, Thursday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத்தை இழந்த இலங்கை – 20 மில்லியன் டொலர் வருவாய் பாதிப்பு!சிறைக் கொடுமைகள் குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அடுத்த சோதனை – IMF குழு இலங்கையில்!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் மழை; மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!இந்து சமுத்திர பாதுகாப்பு குறித்து முக்கிய கலந்துரையாடல்!பொறியியல் பிரிவு தலைவரிலிருந்து CEO பதவிக்கு விபுல் மிஸ்ரா!இலங்கையுடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ராஜ்நாத் சிங்!செம்மைப்படுத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்!

மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் மழை; மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

உள்ளூர்September 10, 2026 · 2 hours முன்5
மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் மழை; மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அந்த திணைக்களம் இன்று (10) அதிகாலை வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்,முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.