2026 October 16, Friday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன் போராட்டம் !

உள்ளூர்April 6, 2026 · 6 months முன்5
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன் போராட்டம் !

தமது செயற்பாடுகளைப் பாதிக்கும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இன்று காலை 9.30 மணிக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கப்பட்டிருந்தது

குறித்த போராட்டத்தை பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் (PDA) ஏற்பாடு செய்திருந்தது

இதன்படி தற்போது நடைமுறையிலுள்ள ஒற்றை-இரட்டை எரிபொருள் விநியோக முறையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளதாகவும்

தற்போதைய எரிபொருள் வில சூத்திரத்தின் கீழ், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு 6% செயல்பாட்டு இலாபம் கிடைப்பதாகவும்

முன்னர் எரிபொருள் நிலையங்களுக்கு 3% இலாபப் பங்கு வழங்கப்பட்டு வந்தது. எனினும், கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினால் இந்த இலாபப் பங்குநீக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்

மேலும் டீசல் மற்றும் பெட்ரோல் விநியோகம் திட்டமிட்டபடி நடைபெறாமையினாலும், விநியோகத்தில் ஏற்படும் தோல்விகளினாலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை வினைத்திறனாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும்

கூட்டுத்தாபனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் நிறுவன முற்கொடுப்பனவு வழங்கப்பட உரிமையிருந்தும், இதுவரை அத்தகைய கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், அவர்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்

தொடர்ச்சியாக நிலவும் இந்த பிரச்சினைகள் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் நிலைப்புத்தன்மையை கடுமையாகப் பாதித்துள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தமக்கான தீர்வினை வலியுறுத்தியே இன்று பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக இந்த அமைதிப் போராட்டத்தை முன்னெடுக்கப்ட்டத்த்தாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .