2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நுவரெலியாவில் தலகல ஓயாவிற்குள் கவிழ்ந்த தனியார் பேருந்து!

உள்ளூர்July 8, 2026 · 3 months முன்5
நுவரெலியாவில் தலகல ஓயாவிற்குள் கவிழ்ந்த தனியார் பேருந்து!

நுவரெலியா நகரில் இன்று (08) இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான விபத்தில், கிரெகரி ஏரியை ஒட்டியுள்ள தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியாவிலிருந்து சாந்திபுர நோக்கிப் பயணித்த குறித்த பேருந்து, தற்காலிகமாக நிறுத்த முற்பட்ட வேளையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தலகல ஓயாவிற்குள் பாய்ந்து கவிழ்ந்துள்ளது. விபத்து இடம்பெற்ற தருணத்தில் பேருந்திற்குள் பயணிகளோ அல்லது பொதுமக்களோ இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் மட்டுமே இருந்துள்ளதுடன், அவர்கள் இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.