2026 November 8, Sunday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வைத்தியர்களின் தேவைக்கு ஏற்ப எரிபொருள் வழங்க திட்டம்

உள்ளூர்March 17, 2026 · 8 months முன்6
வைத்தியர்களின் தேவைக்கு ஏற்ப எரிபொருள் வழங்க திட்டம்

வைத்தியர்களின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். 

சேவைத் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் எரிபொருள் அளவைக் குறிப்பிடும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

“QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் போது, பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் மற்றும் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

இன்னும் ஒரு சில நாட்களுக்கு இந்த சிக்கல்கள் இருக்கும், பின்னர் அவை தீர்க்கப்படும். 

நாம் இதனை ஒரு பொதுவான சுற்றறிக்கையாகவே அறிமுகப்படுத்தியுள்ளோம். விசேடமான தொழில் பிரிவுகள் மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபடும் வாகனங்கள் உள்ளன. 

அவை தொடர்பான தனித்தனியான வழிகாட்டல்கள் மற்றும் சுற்றறிக்கைகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியிடப்படும்.