2026 September 16, Wednesday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
மழை தொடர்ந்தால் நிலச்சரிவு அபாயம் மேலும் அதிகரிக்கும்!சட்டவிரோத வாகன வைத்திருப்பு குற்றச்சாட்டு – வழக்கு நீதிமன்றத்தில்!சிங்கப்பூர் பயணத்திற்கு முன் FCID கடிதம் கையளிப்பு – குடும்பம் கூறும் பதில்!FCID ஆஜருக்கு இன்னும் சில நாட்கள் – சிங்கப்பூர் சென்றார் ஷிரந்தி!மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களுக்கு மழை எச்சரிக்கை!ஊழலுக்கு கட்சிப் பேதமின்றி நடவடிக்கை – ஹரிணி!நெல் கொள்முதல் தடைப்படாமல் தொடர அரசு நடவடிக்கை!MiG போர் விமானக் கொள்முதல் – மீண்டும் சூடு பிடிக்கும் விசாரணை!

சட்டவிரோத வாகன வைத்திருப்பு குற்றச்சாட்டு – வழக்கு நீதிமன்றத்தில்!

உள்ளூர்September 16, 2026 · 1 hour முன்6
சட்டவிரோத வாகன வைத்திருப்பு குற்றச்சாட்டு – வழக்கு நீதிமன்றத்தில்!

சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ், இது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்கு என நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த வழக்கின் விசாரணையை இறுதித் தடவையாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.