2026 October 17, Saturday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 30° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

BREAKINGஉள்ளூர்December 3, 2025 · 11 months முன்3
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

பாராளுமன்றம் நடவடிக்கைகள் இன்று (03) காலை 09.00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் பின்வருமாறு,

மு.ப. 09.00 – மு.ப. 09.30: பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளன.

மு.ப. 09.30 – மு.ப. 10.00: வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மு.ப. 10.00 – மு.ப. 10.30: பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

முற்பகல் 10.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது. இதில் பின்வரும் அமைச்சுகளின் செலவுத் தலைப்புகள் குறித்து விவாதிக்கப்படும்:

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு

மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையுடன் இன்றைய பாராளுமன்ற அமர்வு நிறைவடையவுள்ளது.