2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி

உள்ளூர்December 3, 2025 · 9 months முன்4
இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி

வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக், தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக அங்குள்ள மக்கள் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் நிவாரண மற்றும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பங்களிப்பை வழங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் இவ்வாறு முன்வந்துள்ளது.