2026 September 26, Saturday ⛅ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர SJB தீர்மானம்.அதிக மழையால் வெள்ள அபாயம் உருவாகலாம் என வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை.தொடை தசைப்பிடிப்பு காரணமாக பட்லர் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார்.22 மில்லியன் மக்களின் உரிமை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சஜித் குற்றச்சாட்டு.2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.தொழில்நுட்ப கோளாறா? கொங்கோ விமான விபத்து குறித்து விசாரணை!சம்மாந்துறை நீதிமன்றத்தில் ரூ.31 இலட்சத்திற்கும் அதிகமான டொலர் பணம் மாயம்!பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்.

சம்மாந்துறை நீதிமன்றத்தில் ரூ.31 இலட்சத்திற்கும் அதிகமான டொலர் பணம் மாயம்!

உள்ளூர்September 26, 2026 · 9 hours முன்4
சம்மாந்துறை நீதிமன்றத்தில் ரூ.31 இலட்சத்திற்கும் அதிகமான டொலர் பணம் மாயம்!

சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இந்தியப் பிரஜைகள் தவறவிட்ட சுமார் 31 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை ரூபாய் பெறுமதியுடைய அமெரிக்க டொலர்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்கள் சம்மாந்துறைப் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றிற்காக இந்தியா – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் கடந்த வியாழக்கிழமை அங்கு வந்துள்ளனர். 

வழக்கு விசாரணையின் போது நீதவான் கோரிய சான்றாதாரத்தைக் காட்டுவதற்காக நீதிமன்றிற்குள் நுழைவதற்கு முன்னர் கைத்தொலைபேசிகளை ஒப்படைத்து வைத்திருந்த இடத்திற்கு இந்தியப் பிரஜை ஒருவர் சென்றுள்ளார். 

அங்குத் தனது கைத்தொலைபேசியைப் பெற்றுக்கொண்ட போது தான் கையில் வைத்திருந்த சுமார் 31 இலட்சம் இலங்கை ரூபாவிற்கும் அதிகமான அமெரிக்க டொலர் பணத்தைக் கொண்ட கடித உறையை அங்கே தவறுதலாக மறந்து வைத்துவிட்டு நீதிமன்றத்திற்கு திரும்பியுள்ளார். 

குறித்த வழக்கு முடிவடைந்த பின்னர் கடித உறை ஞாபகத்திற்கு வரவே உடனடியாகத் தொலைபேசியைப் பெற்ற உணவகப் பகுதிக்குச் சென்று தேடியுள்ளார். 

எனினும் அங்குப் பணத்துடன் கூடிய கடித உறை காணப்படவில்லை. 

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன் சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டிற்கு அமைவாக உடனடியாகச் செயற்பட்ட சம்மாந்துறைப் பொலிஸார் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இரு பெண் சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன், அவர்கள் மேலதிக விசாரணைக்காகச் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளின் உதவியுடன் காணாமல்போன கடித உரையினை கண்டறியும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.