2026 October 30, Friday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஒரு கோடி ரூபா பெறுமதியான “குஷ்” ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உள்ளூர்January 20, 2026 · 9 months முன்1
ஒரு கோடி ரூபா பெறுமதியான “குஷ்” ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான “குஷ்” ரக போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர், அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோது, இன்று அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு, மருதானை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் உணவுப்பொருள் விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஒரு தொழிலதிபர் ஆவார்.

அவர் இந்த போதைப்பொருள் தொகுதியை மலேசியாவில் கொள்வனவு செய்து, அங்கிருந்து சிங்கப்பூர் வந்து, பின்னர் இன்று அதிகாலை 12.45 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் SQ-468 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த கைப்பைக்குள் 03 பொதிகளாக பொதி செய்யப்பட்டிருந்த, 01 கிலோ 024 கிராம் எடையுள்ள “குஷ்” போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.