2026 September 23, Wednesday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
எரிபொருள் விலையில் மாற்றமா? மானியமா? பேச்சுவார்த்தை தீவிரம்பாதுகாப்புத் தலைமை அதிகாரி அலுவலகம் முடிவுக்குஎயார்பஸ் விவகாரத்தில் நாமல் மீண்டும் நீதிமன்றத்தில்“மயிலத்தமடு–மாதவனை என்று பேசி களைத்துவிட்டோம்” – சாணக்கியன்மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்இலங்கைக்கு அனுப்பப்பட்ட குஷ், ஹசீஸ் சிக்கியது!ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது – இலங்கையில் மழை தொடரும்!உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழியச் சிறை!

பாதுகாப்புத் தலைமை அதிகாரி அலுவலகம் முடிவுக்கு

உள்ளூர்September 23, 2026 · 1 hour முன்1
பாதுகாப்புத் தலைமை அதிகாரி அலுவலகம் முடிவுக்கு

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியை (நீக்குவதற்கான) சட்டமூலத்திற்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது சான்றொப்பத்தை இட்டுள்ளார்.

இதன்படி, குறித்த சட்டமூலம் நேற்று (22) முதல் சட்டமாக அமுலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டமூலம் முதன்முறையாக வாசிப்பதற்காக 2026 ஓகஸ்ட் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் இரண்டாம் வராக வாசிப்பு மீதான விவாதம் கடந்த செப்டம்பர் 09 ஆம் திகதி நடைபெற்றதுடன், அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பின்றி அது நிறைவேற்றப்பட்டது.

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி பதவியை நிறுவி அறிமுகப்படுத்தப்பட்ட 2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்புத் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்காகவே இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

2009 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அச்சட்டத்தின் மூலம், காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஆயுதப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான பணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட காரியங்களுக்காக பாதுகாப்புத் தலைமை அதிகாரி பதவி உருவாக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி சட்டம் நீக்கப்பட்டதன் மூலம், பாதுகாப்புத் தலைமை அதிகாரி பதவியும் முடிவுக்கு வருகிறது.

மேலும், புதிய சட்டம் அமுலுக்கு வந்ததை அடுத்து, பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களும், பாதுகாப்பு விடயம் ஒதுக்கப்பட்டுள்ளது அமைச்சரின் அமைச்சிற்கு மாற்றப்படவுள்ளன.

இதற்கமைய, இந்த சட்டமூலம் 2026 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது.