2026 November 9, Monday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 25° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

எரிபொருள் விலையில் மாற்றமா? மானியமா? பேச்சுவார்த்தை தீவிரம்

உள்ளூர்September 23, 2026 · 2 months முன்6
எரிபொருள் விலையில் மாற்றமா? மானியமா? பேச்சுவார்த்தை தீவிரம்

எதிர்காலத்தில் எரிபொருள் விலை தொடர்பான மானியம் வழங்குவது அல்லது விலை திருத்தம் செய்வது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். 

கடந்த நாட்களில் ஏனைய எரிபொருள் விநியோக நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் குறைத்தமையினால், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பாக கடந்த வாரம் அனைத்து எரிபொருள் நிறுவனங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தலைவர் தெரிவித்தார். 

இதன்போது, அந்நிறுவனங்கள் தமக்கு ஏற்படும் நஷ்டம் குறித்து அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அவர் கூறினார். 

அதன்படி, RM Parks நிறுவனம் ஒரு லீற்றர் டீசலுக்கு 173 ரூபாயும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 38.75 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன், Sinopec நிறுவனம் ஒரு லீற்றர் டீசலுக்கு 192 ரூபாயும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 67 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. 

IOC நிறுவனம் ஒரு லீற்றர் டீசலுக்கு 136 ரூபாயும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 57 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார். 

அரசாங்கத்திற்கு ஒரு தேசிய பொறுப்பு உள்ளபோதிலும், ஏனைய நிறுவனங்கள் வியாபார நோக்கில் செயற்படுவதனால், நஷ்டத்துடன் எரிபொருளை விற்பனை செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டுகிறார். 

அந்நிறுவனங்களுடன் கையொப்பமிடப்பட்டுள்ள ஒப்பந்தங்களின்படி, நிர்ணயிக்கப்பட்ட விலையில் எரிபொருளை விற்பனை செய்யும்போது நஷ்டம் ஏற்பட்டால், அந்த நஷ்டத்தை அரசாங்கமே ஈடுசெய்ய வேண்டும் என்ற ஏற்பாடு உள்ளதாகவும் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார். 

அதற்கமைய, அந்நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் எரிபொருளை விற்பனை செய்ய அனுமதிப்பது அல்லது அரசாங்கம் தலையிட்டு மானியம் வழங்குவது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.