2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

உள்ளூர்April 20, 2026 · 6 months முன்4
புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.

01. பப்புவா நியூ கினியா சுதந்திர நாட்டின் உயர்ஸ்தானிகராக வின்சென்ட் சுமேல் (Vincent Sumale) (புதுடில்லியை தளமாகக் கொண்டவர்).
02. சோமாலிய பெடரல் குடியரசின் தூதுவராக அப்துல்லாஹி முகமது ஒடோவா (Abdullahi Mohammed Odowa) (புதுடில்லியை தளமாகக் கொண்டவர்).
03. லக்சம்பர்க் நாட்டு தூதுவராக கிறிஸ்டியன் பீவர் (Christian Biever) (புதுடில்லியை தளமாகக் கொண்டவர்).
04. வத்திக்கானின் அப்போஸ்தலிக்க தூதுவராக மொன்சிஞ்ஞோர் ஆண்ட்ரே ஜோஸ்வோவிக் (Monsignor Andrzej Józwowicz)
05. பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யார் நசீர் (Nayyar Naseer)
06.குவைத் நாட்டின் தூதுவராக சலே முபாரக் அல்-சரவி (Saleh Mubarak Al-Sarawi)
ஆகியோர் இவ்வாறு ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களுடன் ஜனாதிபதி சுமூகமான உரையாடலில் ஈடுபட்டதோடு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.