2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 33° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

“தேசிய இராணுவ வெற்றி தினம்” இன்று – ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு!

உள்ளூர்May 19, 2026 · 5 months முன்7
“தேசிய இராணுவ வெற்றி தினம்” இன்று – ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு!

யுத்த வெற்றியின் 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெறும் “தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வு” இன்று (19) பத்தரமுல்லையில் உள்ள படை வீரர்கள் நினைவிடத்திற்கு முன்பாக ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

நாட்டிற்காக உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்வில், முப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த படைவீரர்களின் உறவினர்களும் முதன்முறையாக கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த படை வீரர்கள் சேவை அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி. கொஹோன, தேசிய ஒற்றுமையையும் படைவீரர்களின் தியாகத்தையும் நினைவுகூரும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.