2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

பாராளுமன்ற நடவடிக்கை ஆரம்பம்!

உள்ளூர்May 19, 2026 · 3 months முன்1
பாராளுமன்ற நடவடிக்கை ஆரம்பம்!

பாராளுமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இன்று முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வின் போது, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது. 

நாளை (20) இலங்கை மத்திய வங்கியினால் 2025ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளதுடன், வியாழக்கிழமை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

மே மாதம் 22ஆம் திகதி, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.