2026 November 11, Wednesday ⛈️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் சீனாவுடன் பேணிய இராஜதந்திர உறவுகளை மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்துள்ளார்.

உள்ளூர்September 25, 2026 · 2 months முன்12
தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் சீனாவுடன் பேணிய இராஜதந்திர உறவுகளை மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்துள்ளார்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்வது குறித்து கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன், இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் உலகளாவிய சூழ்நிலைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 

தாம் ஜனாதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் பேணப்பட்ட இராஜதந்திர உறவுகள் மற்றும் சீனாவுடனான நினைவுகளை மைத்திரிபால சிறிசேன இதன்போது நினைவு கூர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவும் ஒத்துழைப்பும் மேலும் வலுவடையும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.