2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

கட்டாயமாகும் SLS தரச்சான்றிதழ்

உள்ளூர்November 2, 2025 · 10 months முன்0

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், ‘உடனடியாகப் பருகக்கூடிய’ அனைத்துப் பழச்சாறு பானங்களும் கட்டாயமாக இலங்கையின் தரச் சான்றிதழான (SLS – Sri Lanka Standards) முத்திரையுடன் இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நினைவூட்டியுள்ளது. 

 

அத்துடன், இதே வகையைச் சேர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட பழச்சாறு பானங்கள், விற்பனைக்கு வருவதற்கு முன்னர், இறக்குமதி பரிசோதனைத் திட்டத்தின் கீழ் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது


குறித்த விதிமுறை, தேசிய உணவு மற்றும் பானத் தரச் சான்றிதழ் தேவைகளுக்கு இணங்க, நுகர்வோருக்கான தயாரிப்பு பாதுகாப்பும் தரத்தையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும். 

 

அத்துடன் இது குறித்து நுகர்வோர் தங்களின் முறைப்பாடுகளை, 1977 என்ற நுகர்வோர் விவகார ஆணையத்தின் இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்