2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

மெக்சிகோவில் சிறப்பங்காடியில் தீ விபத்து – 23 பேர் உயிரிழப்பு

உலகம்November 2, 2025 · 10 months முன்0
மெக்சிகோவில் சிறப்பங்காடியில் தீ விபத்து – 23 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் சிறப்பங்காடியில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழந்துடன். மேலும் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்

 

மெக்சிகோவின் சோனோராவில் இயங்கி வரும் சிறப்பங்காடி ஒன்றில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். 

 

காயமடைந்தவர்களை மீட்ட தீயணைப்பு படையினர், அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் உதவ, உள்துறை அமைச்சருக்கு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம் உத்தரவிட்டுள்ளார். 

 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம், சோனோரா மாநில ஆளுநர் அல்போன்சோ ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். 

 

திடீரென தீப்பற்றியதுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.