2026 October 15, Thursday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 25° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் முடிவா? ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

உலகம்July 8, 2026 · 3 months முன்6
அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் முடிவா? ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

நேட்டோ உச்சிமாநாட்டில் ஊடவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட அவர், நான் இனி அவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

என்னைப் பொறுத்தவரை,அது முடிந்துவிட்டது. அவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல், அவர்கள் பொய்யர்கள் என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இரு தரப்பு பேச்சுவார்த்தையாளர்களும் பேசலாம், ஆனால் அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.