2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

உலகம்April 25, 2026 · 6 months முன்3
ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானிற்கு  விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முன்மொழிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) நேற்று இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்துள்ளார்.

அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முன்மொழிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, ஈரான் தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், அந்த முன்மொழிவில் உள்ள விடயங்கள் குறித்து தமக்கு இன்னும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

ஈரான் வெளியுறவு அமைச்சரின் பாகிஸ்தான் விஜயம் தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ‘X’ தளத்தில் இட்டுள்ள பதிவில், அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லையெனத் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், இந்த அறிக்கை வெளிவருவதற்கு முன்னதாக அமெரிக்கா வெளியிட்ட தகவலில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க விசேட பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இன்று (25) காலை பாகிஸ்தான் நோக்கிப் புறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.