2026 September 12, Saturday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 32° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டயானாவின் கருப்பு ஆடை ஏலத்தில்!பொலன்னறுவையில் அநுர தலைமையில் விவசாயிகள் பேரணி!அநுர அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!எல் நினோ தீவிரம் – ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!கனமழை, இடி, மின்னல் – எச்சரிக்கையாக இருங்கள்!பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபய

எல் நினோ தீவிரம் – ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!

உள்ளூர்September 12, 2026 · 1 hour முன்4
எல் நினோ தீவிரம் – ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!

எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (12) காலை வெளியிட்ட அண்மைய தரவு அறிக்கையின்படி, நாடு முழுவதிலும் உள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து குடிநீர் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதற்கமைய 36 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வாழும் 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 நபர்களுக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.