2026 September 12, Saturday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 32° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டயானாவின் கருப்பு ஆடை ஏலத்தில்!பொலன்னறுவையில் அநுர தலைமையில் விவசாயிகள் பேரணி!அநுர அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!எல் நினோ தீவிரம் – ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!கனமழை, இடி, மின்னல் – எச்சரிக்கையாக இருங்கள்!பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபய

அநுர அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!

உள்ளூர்September 12, 2026 · 57 minutes முன்4
அநுர அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலை (12) சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெறுகிறது. 

அநுர அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளை செயற்படுத்தவில்லை என்கின்ற அடிப்படையில் இந்த போராட்டம் சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்படுகிறது. 

அத்துடன் அரசியல் கைதிகளுடைய விடுதலை, கையகப்படுத்தியிருக்கக்கூடிய காணிகளை விடுவித்தல், செம்மணி புதைகுழிக்கான நீதி கோரல், மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்டத்தில் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.