2026 November 6, Friday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மண்சரிவு அபாயம் அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்!

உள்ளூர்September 15, 2026 · 2 months முன்8
மண்சரிவு அபாயம் அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்!

கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று (15) காலை 10.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (16) காலை 10.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும். 

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள், அத்துடன் கேகாலை மாவட்டத்தின் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.