2026 September 15, Tuesday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
ஊழலுக்கு கட்சிப் பேதமின்றி நடவடிக்கை – ஹரிணி!நெல் கொள்முதல் தடைப்படாமல் தொடர அரசு நடவடிக்கை!MiG போர் விமானக் கொள்முதல் – மீண்டும் சூடு பிடிக்கும் விசாரணை!ஜனாதிபதி செயலகத்தை பார்வையிட்ட மாணவர்களுக்கு பிரதமரின் செய்தி!இன்று இரவு வரை பலத்த மின்னல் எச்சரிக்கை!மண்சரிவு அபாயம் அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்!பள்ளிக் கல்வியில் பெரிய மாற்றம் – புதிய பாடத்திட்டம் தயாராகிறது!தாய்லாந்தில் இலங்கையர்களுக்கு மெகா வேலைவாய்ப்பு!

இன்று இரவு வரை பலத்த மின்னல் எச்சரிக்கை!

உள்ளூர்September 15, 2026 · 4 hours முன்5
இன்று இரவு வரை பலத்த மின்னல் எச்சரிக்கை!

பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

இந்த அறிவித்தல் இன்று (15) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், அது இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும். 

இதற்கமைய வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களுடன் அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் விபத்துகள் ஏற்படுவதற்கான அதிக அவதானம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பிரதேசங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. 

மேலும், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.