2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 28° ⛈️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கயந்த கருணாதிலக்க முன்வைத்த கோரிக்கை

உள்ளூர்January 6, 2026 · 10 months முன்4
கயந்த கருணாதிலக்க முன்வைத்த கோரிக்கை

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தம் இல்லாமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எதிர்க்கட்சி முன்மொழிந்த விசேட தெரிவுக்குழுவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க இன்று (06) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், விசேட தெரிவுக்குழுவின் அமைப்பை மாற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

குறித்த தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான எழுத்துமூல கோரிக்கையொன்று கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், அது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் தெரிவித்தார்.