2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தீவிரமடையும் கிழக்கு வைத்தியர்களின் போராட்டம்

உள்ளூர்January 14, 2026 · 9 months முன்9
தீவிரமடையும் கிழக்கு வைத்தியர்களின் போராட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் இன்று நண்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக நீக்கி பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் டாக்டர் தி.தேவநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக நீக்கி பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் தொடக்கம் வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பினை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் நோயாளர் பிரிவுகள் இயங்கும் நிலையில் ஏனைய பிரிவுகளில் வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய தினம் பகல் 12.30மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய வைத்தியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.