2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

விமல் வீரவங்சவின் பிடிவிறாந்தை இரத்து செய்தது மேல் நீதிமன்றம்!

உள்ளூர்January 14, 2026 · 7 months முன்1
விமல் வீரவங்சவின் பிடிவிறாந்தை இரத்து செய்தது மேல் நீதிமன்றம்!

கைது செய்வதற்காக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து, அந்த பிடிவிறாந்தை மீளப் பெறுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை முறையற்ற வகையில் ஈட்டியதாகக் குற்றம் சுமத்தி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (14) முற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் மொஹமட் மிஹால் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தார்.

பின்னர், விமல் வீரவங்ச இன்று (14) தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்துஇ குறித்த பிடிவிறாந்தை மீளப் பெறுவதற்கு நீதவான் உத்தரவிட்டார்.