2026 September 6, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

தெற்கு நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் விரிசல்.

உள்ளூர்August 27, 2025 · 1 year முன்3
தெற்கு நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் விரிசல்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 19வது கிலோ மீட்டருக்கும்,34வது கிலோமீட்டருக்கு இடையிலான பகுதியை கொட்டவ மற்றும் தொடங்கொட இடையே புனரமைக்க அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 19வது கிலோமீட்டருக்கு ,34வது கிலோமீட்டருக்கு இடைப்பட்ட பகுதியில் கொட்டாவ மற்றும் தொடங்கொட இடையே விரிவான மேட்பரப்பு அரிப்பு மற்றும் உல் கட்டமைப்பு அடுக்குகளின் சீரழிவு காணப்படுகிறது.

எனவே மேற்படி சாலைப்பகுதியயை புனரமைத்தல்,அடித்தள இடிபாடுகளை சரிசெய்தல் மற்றும் புதிய மேட்பரப்பு பயன்படுத்தவேண்டும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்காக தகுதிவாய்ந்த உள்ளூர் நிறுவங்களிடமிருந்து விலைமனுக்கள் கூறப்பட்டுள்ளன.

பெறப்பட்ட ஏலங்களை மதிப்பிட்ட பிறகு ஒப்பந்தத்தை மிகக்குறைந்த எலதாரரான மாகா இன்ஜினீரின் (பிரைவேட் லிமிடெட் )நிறுவனத்திற்கு வழங்க பரிந்துரைத்துள்ளது.

வரையறுக்கப்பட்ட நிறுவனத்திற்கு தொடர்புடைய ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.