2026 September 29, Tuesday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.மத்திய மாகாண லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்.நிதி மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கிரிஷ் வழக்கு விசாரணை.இலங்கை சார்பில் தேசிய உரையாற்றவுள்ளார் வெளிவிவகார அமைச்சர்.யோஷித ராஜபக்ஷ தொடர்பான நிதித்தூய்தாக்கல் வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு.செப்டம்பர் 28 நடைபெறவிருந்த மஹாபொல விழா புதிய திகதி அறிவிக்கப்படும் வரை ஒத்திவைப்பு.மத்திய கிழக்கு பதற்றத்தால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு.ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் இந்த ஆண்டிற்குள் வழங்கப்படும்.

தமிழக ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்!

அரசியல்May 8, 2026 · 5 months முன்10
தமிழக ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் நோக்கில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாகச் செயற்படும் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தைக் கண்டித்தும், அவர்களின் ஆலோசனையின் படி செயற்படும் ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழக காங்கிரஸ் கட்சியினரால் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலை, தாராப்பூர் அருகே இன்று முற்பகல் 11 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியினர் இன்னும் சற்று நேரத்தில் ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் மாளிகை முன்பாக பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.