2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! 42 பேர் காயம் – இருவரின் நிலை கவலைக்கிடம்.

உள்ளூர்June 27, 2026 · 2 months முன்1

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். 

தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் பேருந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்தில் காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில், ஒருவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தியத்தலாவை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.