2026 October 24, Saturday ⛅ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் : தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பு .

உலகம்December 28, 2025 · 10 months முன்4
கேரளாவில் பறவைக் காய்ச்சல் :  தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பு .

இந்தியாவின் கேரளா மாநிலம், குறிப்பாக ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் கோழி, வாத்து போன்ற பறவைகள் பெரிதும் வளர்க்கப்பட்ட பண்ணைகளில் அடிக்கடி செத்து மடிந்ததால், மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

சோதனையில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி, கேரளாவில் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோழி, காடை இறைச்சி மற்றும் முட்டை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு, பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகள் மொத்தமாக அழிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிலும் எல்லை மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கேரளா–தமிழ்நாடு எல்லையோர வாகனங்கள் சோதனை செய்யப்படுவதுடன், கிருமிநாசினிகள் தெளித்து, கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் நடத்தப்படுகின்றன.