2026 October 15, Thursday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 25° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாடளாவிய ரீதியில் 436 மருத்துவர்களுக்கு நியமனம்

உள்ளூர்April 9, 2026 · 6 months முன்5
நாடளாவிய ரீதியில் 436 மருத்துவர்களுக்கு நியமனம்

நாட்டின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், 436 விண்ணப்பதாரர்களுக்கான பயிற்சிக்கு பின்னரான மருத்துவ நியமனங்களைச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்த தகுதியான மருத்துவர்களுக்கான நியமனப் பட்டியலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி புதிய மருத்துவர்கள் அனைவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட வைத்தியசாலைகளுக்குச் சென்று இன்று முதல் ஏப்ரல் 11 ஆம் திகதிக்குள் கடமைகளைப் பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.