2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

உயர்தர மனைப்பொருளியல் செய்முறைப் பரீட்சை திகதி அறிவிப்பு!

உள்ளூர்January 17, 2026 · 7 months முன்2
உயர்தர மனைப்பொருளியல் செய்முறைப் பரீட்சை திகதி அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (2025) மனைப்பொருளியல் (Home Economics) பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவித்தலுக்கமைய, உரிய செய்முறைப் பரீட்சையானது வரும் 2026 ஜனவரி 24ஆம் திகதி முதல் பெப்ரவரி 02ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள 42 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறே, அனுமதி அட்டைகள் தபால் மூலம் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகளுக்கு, 2026 ஜனவரி 19ஆம் திகதி முதல் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களுக்காக, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பாடல் ஊடகங்கள் ஊடாக வினவ முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவசர அழைப்பு இலக்கம்: 1911

தொலைபேசி இலக்கங்கள்: 011 2784208 ஃ 011 2784537

தொலைநகல் இலக்கம்: 011 2784422

மின்னஞ்சல்: gcealexam@gmail.com