2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

உள்ளூர்January 17, 2026 · 7 months முன்0
பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் நாளாந்த அறிக்கையை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக, பொலிஸ் பிரிவுகள் மட்டத்தில் அனைத்து பிரதேச பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த விசேட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

அதற்கமைய, பொலிஸாரால் நேற்று (16) 30,386 பேர் சோதனையிடப்பட்டதுடன், இதன்போது சந்தேகத்தின் பேரில் 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த நடவடிக்கையின் போது, குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 18 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 268 பேரும், திறந்த பிடியாணை கொண்ட 184 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குடிபோதையில் வாகனம் செலுத்திய 469 பேரும், கவனயீனமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 72 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வேறு போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் 4,584 பேரும் இதன்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.