2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

யாழ்.போதனாவில் நிறை போதையில் சிகிச்சைக்கு வந்தவர் அட்டகாசம்

உள்ளூர்January 14, 2026 · 9 months முன்10
யாழ்.போதனாவில் நிறை போதையில் சிகிச்சைக்கு வந்தவர் அட்டகாசம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்தவர், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் அதிகாலை 1.40 மணியளவில் நிறை போதையில் இரத்த காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் 24ஆம் இலக்க விடுதியில் தங்க வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது.

அதன் போது, தாதிய உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களுடன் முரண்ப்பட்டு தூஷண வார்த்தைகளை பேசி, விடுதியில் ஏனைய நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார்.

அதனை அடுத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விடுதிக்கு விரைந்து குறித்த நபரை கட்டுப்படுத்த முயன்ற போது, தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அச்சுறுத்தியுள்ளார்.

அதனை அடுத்து அவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை ஒரு உத்தியோகஸ்தருக்கு கைகளில் காயம் ஏற்பட்ட நிலையில், தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.