2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அமரகீர்த்தியின் கொலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

உள்ளூர்January 14, 2026 · 7 months முன்3
அமரகீர்த்தியின் கொலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்க கம்பஹா நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

2022 மே 9ஆம் திகதி நிட்டம்புவ நகரில் இலங்கை பொதுஜன பெரமுன பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்புக் காவலர் ஜெயந்த குணவர்தன ஆகியோரைத் தாக்கி கொலை செய்ததற்காக 41 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் 2023ஆம் ஆண்டு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.