2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிடில் தாக்குதல் உறுதி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

உலகம்March 31, 2026 · 7 months முன்3
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிடில் தாக்குதல் உறுதி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானின் புதிய மற்றும் நியாயமான ஆட்சியுடன் அமெரிக்கா “தீவிரப் பேச்சுவார்த்தைகளில்” ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது முறையான உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்பதை ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை சர்வதேச சந்தையில் மேலதிக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.