2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

கொழும்பில் மீண்டும் வாகன தரிப்பிடக் கட்டணம் அறவீடு

உள்ளூர்March 22, 2026 · 5 months முன்2
கொழும்பில் மீண்டும் வாகன தரிப்பிடக் கட்டணம் அறவீடு

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள் நாளை முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.

நிர்வாகக் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தக் கட்டண அறவீடு நடவடிக்கைகள், நாளை முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட தரிப்பிட இடங்களில் கடமையில் உள்ள ஊழியர்களிடமோ அல்லது டிஜிட்டல் முறையிலோ கட்டணங்களைச் செலுத்த முடியும்.

இதேவேளை விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மற்றும் கட்டணம் செலுத்தத் தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபை எச்சரித்துள்ளது.