2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

எரிபொருள் நெருக்கடி : பாடசாலைகளை மூட இதுவரை தீர்மானமில்லை

உள்ளூர்March 22, 2026 · 5 months முன்1

நாட்டின் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும், பாடசாலைகள் நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அரசாங்க ஊடகப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வித் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில், வாரத்தில் நான்கு நாட்கள் பாடசாலைகளை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக, வாரத்தின் புதன்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கடந்த காலங்களில் நிலவிய நிச்சயமற்ற சூழ்நிலைகளால் சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்திருந்தனர்.

இதனைக்கருத்திற் கொண்டே, வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது பாடசாலைகளை நடாத்த அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.